ஊழியர் நலன் என்பது வெற்று கோஷமல்ல. உயிர் மூச்சு

Monday, May 22, 2017

சீர்காழி கிளை அஞ்சல் நான்கின் கோட்ட மாநாடு

நமது கோட்டத்தில் சீர்காழி கிளை அஞ்சல் நான்கின் கோட்ட மாநாடு சீரும் சிறப்புமாக நேற்று (21.05.2017) மிகச் சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டில் அஞ்சல் நான்கின் தமிழ் மாநில செயலர் மரியாதைக்குரிய தோழர் G. கண்ணன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார். மாநாட்டில் சீர்காழி கிளைத் தலைவராக தோழர் மனோகரன் அவர்களும் செயலராக தோழர் ராஜேந்திரன் அவர்களும் பொருளராக தோழர் சரவணக்குமார் அவர்களும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். அனைத்துப் புதிய பொறுப்பாளர்களுக்கும் மயிலாடுதுறை அஞ்சல் மூன்றின் சார்பாக வீர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்...

Thursday, May 11, 2017

அவசரப் பொதுக்குழு கூட்டம்

நாள்: 16.05.2017 நேரம்: மாலை 6 மணி
இடம்: மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம்

Monday, May 1, 2017

மே தின கொடியேற்று விழா..... உழைக்கின்றவர்க்கே உலகம் சொந்தம்.... வாழாமல் உழைத்து உழைக்காமல் வாழ்பவர்க்கு உழைத்துக் கொண்டிருக்கும் தொழிலாளியே உலகம் உனக்கே சொந்தம்...

மே தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை தலைமை அஞ்சலகத்தில் சங்க கொடியேற்றுவிழா சிறப்பாக நடைப்பெற்றது.
விழாவிற்கு அஞ்சல் மூன்றின் கோட்ட தலைவர் தோழர் G.ஊமதுரை அவர்கள் தலைமை தாங்கினார்.
சங்ககொடியை கோட்ட உதவி தலைவர் தோழர் N. இலங்கோவன் அவர்கள் ஏற்றிவைத்தார். நிகழ்ச்சியில் நமது சங்க்கத்தின் முன்னால் மாநில உதவி செயலர் மதிப்பிற்குரிய மூத்தத் தோழர் மருதுசாமி அவர்கள் சிறப்புரை வழங்கினார்.

Tuesday, April 25, 2017

Commission for Sovereign Gold Bond

A letter has been sent to our beloved and respected com. R.N. Parashar regarding payment of commission for SGB.......

சனிக்கிழமை விடுமுறை வேண்டி....

பெரும்பாலான மத்திய அரசு துறைகளுக்கு வாரம் இரண்டு நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. அஞ்சல் துறையிலும் Administration பகுதியில் உள்ளவர்களுக்கும் வாரம் இரண்டு நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. இன்று வங்கிகளும் 2,4 சனிக்கிழமையை விடுமுறை நாளாக மாற்றிக் கொண்டிருக்கின்றன. இன்சூரன்ஸ் துறையான LICம் இவ்வாறே உள்ளது. ஆனால் அஞ்சல் துறையின் operative பகுதியில் வேலை செய்பவர்களுக்கு வாரம் ஆறு நாட்கள் வேலை நாட்கள். அப்படிப் பார்த்தால் வருடம் 365 நாட்களில் தோராயமாக 17 விடுமுறை நாட்கள், 52 ஞாயிறு விடுமுறை (17ல் சில ஞாயிறிலும் வரும்) சேர்த்து 69 நாட்கள் போக 296 நாட்கள் வேலை நாட்களாக உள்ளது. மற்றவர்களுக்கு 244 நாட்களே வேலை நாட்கள். 52 நாட்கள் அதிகம் வேலை செய்யும் நமக்கு அதற்குரிய  ஈட்டிய விடுப்போ அல்லது சனிக்கிழமை விடுமுறையோ வழங்கப்படுமானால் அது நம் அனைவருக்கும் அளவில்லா மகிழ்ச்சி செய்தியாக அமையும். இதைக் கருத்தில் கொண்டு விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என நம் NFPE P3 அகில இந்தியப் பொதுச் செயலாளார் நம் துறை secretaryக்கு கடிதம் எழுதியுள்ளதன் செய்தி பின்வருமாறு:

     Ref: PF/GENL/NFPE                                                                Dated – 11.02.2016

To

            The Secretary
            Department of Posts
            Dak Bhawan, New Delhi – 110001

Sub: -        Provision of five days week – request consideration.

Madam,

            The Postal operative staff are in great pressure and heavy strain in the work after the implementation of ongoing CBS, CIS etc. Two days rest in a week will motivate them better work performance.

            Already, five day weak is in vogue in respect of Postal administrative offices and Postal accounts. Only the operative offices are kept open for six days in a week.

            Recently, the bank employees have been observed five day weeks in the second and fourth week of the month. This is being introduced in the insurance public sector companies like LIC.

            It is therefore requested to kindly consider to observe five days week in the Postal operative officers.

            Soliciting favourable response

Yours faithfully,

(R. N. Parashar)

Secretary General

ஏறக்குறைய ஒருவருடத்திற்கு மேலாகியும் அது குறித்தான மேற்கொண்ட செய்தி எதுவும் கிடைக்கப்பெறாமல் இருக்கிறது. அது குறித்து மேற்கொண்டு முயற்சிகள் எடுத்து
வெற்றிப் பெற்று ஒரு மகத்தான சாதனையை நமது சங்கம் பெற்றுத்தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
வி. மோகன் குமார் ,
கோட்ட செயலர்,
அஞ்சல் மூன்று ( NFPE)
மயிலாடுதுறை கோட்டம்